தியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரியின் மோட்டார் சைக்கிளை எரித்து நாசம் செய்தார் எனற சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று மாலை (19) கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் 12 வருட இரணுவ சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து விலகி தற்போது கல்கந்த தியத்தலாவ பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18ஆம் திகதி இரவு பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது தியத்தலாவ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு தீயிட்டு நாசமாக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில் தியத்தலாவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்யின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
ராமு தனராஜா

