பசறை பிரதேசத்தில் மதன மொதக போதைப் பொருளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 வயதான பசறை, பெல்கஹதென்ன மற்றும் பசறை பன்சல வீதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு இளைஞர்களையும் பசறை நகரில் சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து ஒன்பது மதன மோதக போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறையின் பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மங்கள நவரத்னவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு சந்தேக நபர்களையும் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்
