Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

August 3, 2026

நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

August 3, 2026

நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

August 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 24 வயதுடைய தாயையும் அவரது 11 மாதக் குழந்தையையும் கொடூரமான முறையில் படுகொலை
இலங்கை

24 வயதுடைய தாயையும் அவரது 11 மாதக் குழந்தையையும் கொடூரமான முறையில் படுகொலை

ThanaBy ThanaJuly 22, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

24 வயதுடைய தாயையும் அவரது 11 மாதக் குழந்தையையும் கொடூரமான முறையில் படுகொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேநபர் உயிரிழந்த வாசனா என்ற பெண்ணின் கணவரின் தூரத்து உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத குழந்தை கடந்த 18 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது கணவர் அங்குருவாத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையை தொடங்கிய பொலிசார், வீட்டின் குளிர்சாதன பெட்டி கதவு மற்றும் தரைப்பகுதிகளில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தனது சகோதரியின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக வாசனாவின் கணவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி முன்னாள் இராணுவ வீரரான அந்த நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.

விசாரணைக்கு பயன்படுத்தப்பட்ட மோப்ப நாயான ‘புருனோ’ சந்தேக நபரின் முச்சக்கரவண்டிக்கு அருகில் நின்றமையால் பொலிஸாரின் சந்தேகம் மேலும் வலுவடைந்தது.

இதற்கிடையில், வாசனாவும் அவரது குழந்தையும் காணாமல் போய் மூன்று நாட்களுக்குப் பிறகு, வாசனாவின் வீட்டிலிருந்து சுமார் ஐநூறு மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் அவர்களது சடலங்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கண்டு பிடிக்கப்பட்டன.

அவர்களின் சடலங்கள் ஏற்கனவே விலங்குகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது, உயிரிழந்த வாசனாவின் கணவர், பொலிசார் மீது குற்றஞ்சாட்டியதுடன், உரிய விசாரணைகளை மேற்கொண்டிருந்தால், தனது மனைவி மற்றும் மகளை காப்பாற்ற வாய்ப்பு இருந்ததாக தெரிவித்தார்.

இதேவேளை, பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இன்று பிற்பகல் சடலங்கள் இருந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் நேற்று (20) விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபர் நேற்று தனது மனைவி வீட்டிற்கு வந்துள்ளார்.

அதை அந்த நபரின் மனைவியும் உறுதி செய்துள்ளார்.

வாசனா மற்றும் குழந்தை காணாமல் போன அன்று, அந்த நபர் தனது முச்சக்கர வண்டியில் சந்தேகத்திற்கிடமான ஒன்றை எடுத்துச் செல்வதைக் காட்டும் சிசிடிவி கெமரா புகைப்படமும் வௌியாகியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026
    Editors Picks

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.