இரத்தினபுரி, லெல்லுபிட்டிய வெலிமலுவ பிரதேசத்தில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றில் இன்று (23) அதிகாலை தீ பரவியுள்ளது.
தொழிற்சாலை முழுவதும் தீ பரவியுள்ளதுடன், தேயிலை தொழிற்சாலைக்கு சொந்தமான ஐந்து லொறிகளும் தீயில் எரிந்து சேதமாகின.
குறித்த தொழிற்சாலை பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான பவித்ரா வன்னியாராச்சிக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மொகமட் அலி
