அஸ்வெசும நிவாரணத் திட்டத்திலுள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தும் வகையிலான கடிதமொன்றை அனுப்புவதற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தீர்மானித்துள்ளார்.
இதுவரை 54 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பெருந்திரளான மக்கள் அஸ்வெசும நன்மைகள் தொடர்பில் போதிய தெளிவில்லாமல் பிரதேச செயலகங்களில் கூடி வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
