லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் இயற்கை வனப்பகுதியில் இனந்தெரியாத இளம் பெண் ஒருவரின் சடலம் ஒன்று (01.08.2023) மாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கல்கந்தை மலை உச்சி என அழைக்கப்படும் வன பகுதியின் உச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடப்பதாக லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் மலையக உச்சிக்கு சென்ற பொலிசார் அங்கு குப்புத்து
கிடந்த பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் பல்கலைகழக மாணவர்கள் ஆராய்ச்சிக்காக அடிக்கடி கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சிக்கு வருகை தருவார்கள்.இவ்வாறு வருகை தந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு சமத்தரை பகுதியில் இந்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் இயற்கை வனப்பகுதியில் இனந்தெரியாத இளம் பெண் ஒருவரின் சடலம் ஒன்று (01.08.2023) மாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கல்கந்தை மலை உச்சி என அழைக்கப்படும் வன பகுதியின் உச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடப்பதாக லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் மலையக உச்சிக்கு சென்ற பொலிசார் அங்கு குப்புத்து
கிடந்த பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் பல்கலைகழக மாணவர்கள் ஆராய்ச்சிக்காக அடிக்கடி கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சிக்கு வருகை தருவார்கள்.இவ்வாறு வருகை தந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு சமத்தரை பகுதியில் இந்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதவான் வருகைக்குப் பின்னர் சடலம் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூட்டு பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக மேலும் லிந்துலை பொலிசார் தெரிவித்தனர்
கௌசல்யா.