தென்னாபிரிக்காவுடனான இருபதுக்கு 20 போட்டியில் கலந்துகொள்ளவுள்ள அவுஸ்திரேலியா அணியின் புதிய தலைவராக மிச்செல் மார்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்காக மூன்று புதிய வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன், சகலத்துறை ஆட்டக்காரர்ஆரோன் ஹார்டி மற்றும் மேட் ஷார்ட் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
