மஹகளுகொல்ல, கரம்பகொடய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் மொனராகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கரம்பகொடயா மஹகளுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மஹகளுகொல்ல பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட மஹகளுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவரைக் இன்று கைது செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹகளுகொல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா

