இரத்தினபுரி தமிழ் தேசிய கல்லூரி மாணவி ஹர்ஷனா கணேந்திரன் சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார்.
ஐ. நா வின் சிறுவர்களுக்கான யூனிசெப் (unicef )அமைப்பின் விசேட தூதுவராக இலங்கை வந்த பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்திக்கும் வாய்ப்பு மாவட்ட வாரியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு சில மாணவர்களுக்கே கிடைத்தது,அதில் இரத்தினபுரி தமிழ் தேசிய கல்லூரி மாணவி ஹர்ஷனா தெரிவாகி இன்று கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வில் சச்சின் டெண்டுல்கருடன் உரையாடி அவருடன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இவர் எமது பாடசாலையில் தரம் 11 ல் கல்வி கற்கும் அதி சிறந்த மாணவி ஆவார், இவர் எலபாத பிரதேச செயலகம், பலாவெல தோட்டத்தில் வசிக்கும் திரு கணேந்திரன் அவர்களுடைய மகள் ஆவாள்.

