வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரி மீசாலை பன்றிக்கேணி அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
மீசாலை நன்னிலத்தில் வந்தருளும் மாமணியே
மீட்சி பெற்று நாம்வாழ வழி காட்ட வேண்டுமைய்யா
முட்டவரும் கொடுமைகளை எட்டியே விலக்கிவிட
அருளளித்துக் காப்பளிப்பாய் பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி ஐயாவே
தேரேறிப் பவனி வந்து தேசமெங்கும் காப்பவனே
திகட்டாத உன் கருணை எமக்கென்றும் வேண்டுமைய்யா
துணையாக இருந்தெம்மை உயர் நிலைக்கு உயர்த்திவிட
அருளளித்துக் காப்பளிப்பாய் பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி ஐயாவே
செந்தமிழின் காவலனாய் திசையெங்கும் அருள்பவனே
சொந்தங்கள் இணைந்து வாழ அருள்புரிய வேண்டுமைய்யா
சுகவாழ்வு பெற்று நாம் திடமாக இருந்துவிட
அருளளித்துக் காப்பளிப்பாய் பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி ஐயாவே
பச்சை மயிலேறி வந்து அருள் பொழியும் சிவன் மகனே
பாசமுடன் இணைந்து வாழ வழிகாட்ட வேண்டுமைய்யா
பெருமையுடன் என்றும் நாம் வளமாக வாழ்வதற்கு
அருளளித்துக் காப்பளிப்பாய் பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி ஐயாவே
சேவற் கொடி தாங்கி தெய்வீகக் காட்சி தரும் உமையவள் திருமகனே
சோர்வின்றி எழுச்சியுடன் வாழ அருள் வேண்டுமைய்யா
சேதமில்லா நல்வாழ்வை நாம் பெற்று வாழ்ந்துவிட
அருளளித்துக் காப்பளிப்பாய் பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி ஐயாவே
குவலயத்தில் நன்மைக்கு குறைவின்றி அருள்பவனே
குற்றம் குறை பொறுத்து நல் அருள் தரவேண்டுமைய்யா
குறைவில்லா நிறைவாழ்வு பெற்று நாமென்றும் வாழ்ந்துவிட
அருளளித்துக் காப்பளிப்பாய் பன்றிக்கேணி கோயில் கொண்ட கந்தசுவாமி ஐயாவே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.