மொனராகலை தம்பகல்ல நாகொல்ல பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த இருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 20 மற்றும் 54 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
