பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
WWW.UGC.AC.LK என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும், அதற்காக ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 04ஆம் திகதி வெளியிடப்பட்டன.
263,933 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் அவர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சும் பொலிஸாரும் இணைந்து புதிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு WhatsApp தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
நன்றி தெரண