ஆசிய கிண்ண தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணியை ஆறு ஓட்டங்களால் வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் அணித்தலைவர் சகிப் ஹல் ஹசன் 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் சமி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
, 266 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 121 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.