இராகலை சென்லேனார்ட் சேர்ந்த மைக்கல் பிரான்சிஸ் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வில் கலந்துகொண்டு தேர்வாகியுள்ளார்.
மாற்று திறனாளியாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அவரது அடைவு உண்மையில் பாராட்டவேண்டியது. ஆயினும்…
தற்போது வாரம் இரண்டு நாட்கள் கேகாலையில் இடம்பெரும் முழு நேர பயிற்சி போட்டிகளில் பங்கேற்க வேண்டும். பின் தங்கிய பிரதேசத்திலிருந்து தெரிவாகும் வீரர்களுக்கே உரிய பல இன்னல்களுக்கு அவர் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. Leather bat, bal, pad, helmet, kit ஆகிய விளையாட்டு உபகரணங்கள் இன்மை மற்றும் போக்குவரத்து செலவுகள், நிரந்தர தொழிலின்மை போன்ற காரணிகளால் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்க சிரமப்படும் அவருக்கு உதவ முன்வாருங்கள்.
Security தொழிலில் முன்னனுபவமுள்ள அவருக்கு கண்டி அல்லது கேகாலை பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபடக்கூடியவாறு விடுமுறையுடன் கூடிய மாற்று திறனாளி ஒருவரால் செய்ய கூடிய bungalow security போன்ற தொழில் ஒன்றை பெற்றுக்கொடுக்க இயலுமானால் சிறப்பாகவிருக்கும். மேலும் விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி என்பவற்றை பெற்றுக்கொள்ள உதவுவோம். பல நல்லுல்லங்களின் உதவியினாலேயே அவர் முதன்முறை தேர்வுக்கு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது தொலைபேசி இலக்கம் 0774186190