பூண்டுலோயா பகுதியில் இருந்து அக்கரப்பத்தனை பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மரம் முறிந்து விழுந்ததால் 17 வயதுடைய சிறுமி பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் பூண்டுலோயா நியாகந்தை பாலுவத்த பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அக்கரப்பத்தனை உருவள்ளி பகுதியை சேர்ந்த விஜயராஜ் திவியராணி என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கௌசல்யா