அவிசாவளை ஹட்டன் பிரதான வீதி ஹியல தல்துவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு.
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
சம்பவம் தொடர்பில் தெரிவதாவது அவிசாவளை தல்துவ குருபஸ்கொட பதிக் கடைக்கு அருகில் தல்துவ பிரதேசத்தில் இருந்து தெஹியோவிட்ட நோக்கி சென்ற முச்சக்கர வண்டியை துரத்திச்சென்று T56 ரக துப்பாககயால் நான்கு நபர்களின் நோக்கி துப்பாக்கிதாரர்கள் பல தடவை வெடிவைத்துள்ளனர்,
இதன்போது இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் பலத்த காயங்களுடன் அவிசாவளை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அவிசாவளை பொலிஸார் அவிசாவளை ஹட்டன் பிரதான வீதியை மூடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.