பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில மொழியோடு ஹிந்தி மற்றும் சீனா மொழிகளை கற்பிக்க வேண்டும். சப்ரகமு மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க கூறுகின்றனர்.
இரத்தினபுரி புனித எலோஸியஸ் கல்லூரியின் 125 வருட பூர்த்தியை முன்னிட்டு இடம் பெற்ற விசேட வர்த்தக கண்காட்சி பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார் அயல் நாடுகளுடன் வர்த்தகம் வியாபாரங்கள் மற்றும் ஏனையவிடயங்களை மேற்கொள்ளும் போது எமது நாட்டு மக்களுக்கு மொழி திறன் கட்டாயம் தேவை எனவே இப்போது பாடசாலைகளில் இருந்து இந்த மொழி திறனை ஆரம்பிக்க வேண்டும்.ஆங்கிழ மொழியோடு ஹிந்தி மற்றும் சீனா மொழிகளை பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று சப்ரகமு மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
