தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு (28.09.2022) ஹட்டன் கல்வி வலயத்தால் கோட்டம் 2, 3ல் இருந்து தெரிவு செய்யப்பட்ட 13 பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய
குடும்பங்களைச் சேர்ந்த 180 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் ஒரு கட்டமாக ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3ல் மஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரி, லக்கம் தமிழ் வித்தியாலயம், மவுசாகலை இல 1 தமிழ் வித்தியாலயம், புலூம்பீல்ட் தமிழ் வித்தியாலயம் மற்றும் பெயாலோவன் தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றைச் சேர்ந்த 54 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியில் இடம்பெற்ற இதற்கான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கலந்து கொண்டு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தார். நிகழ்வில் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிர்வாக செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் இன்று 28ம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது கட்சி ஆதரவாளர் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

