நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை – ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம். சாதிக் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, குறித்த அபாயகரமான பகுதியில் வாகனப் போக்குவரத்து தற்போது ஒரு வழிப்பாதையாக மட்டுமே அனுமதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, சீரற்ற வானிலை தொடர்வதால், ஹட்டன் முதல் கித்துல்கல வரையிலான பாதையில் பயணிக்கும் வாகனச் சாரதிகள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலக நிறைவேற்றுப் பொறியியலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக, ஹட்டனில் இருந்து கித்துல்கல வரை பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
