மலையக தமிழர் என அடையாளத்திற்கான மக்கள் செயலணியின் கொழும்பு பிரகடனம் கொழும்பு 6 ,இல 409 டியூனிகல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று (28/09) நடைப்பெற்றது.
அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்களும் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.
இனி வரும் காலங்களில் நாங்கள் மலையக மக்கள் என்று தனித்துவமான அடையாளத்துடன் இனம் காணப்பட வேண்டும் என்பதுடன் ,மலையக மக்கள் தனியான ஒரு தேசிய அடையாளமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று செய்தியோடு மலையாக மக்களுக்கு நிரந்தர காணியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டு கருத்தியலையும் முன்வைத்து பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். சட்டத்தரணி விஜயகுமார், சட்டத்தரணி ஜெயரத்ன ராஜா ,முன்னாள் பீடாதிபதி சிவ ராஜேந்திரன் ஆகியோரால் மேற்படி பிரகடனம் மக்கள் பயபடுத்தப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.