ஹட்டன் மக்கள் வங்கி மற்றும் ஹட்டன் காவல் துறை இணைந்து இன்று சிறுவர் தினம் சிறப்பாக கொண்டாடபட்டது.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
ஹட்டன் 319/C கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்கள் ஹட்டன் மக்கள் வங்கி மற்றும் ஹட்டன் காவல் துறை அதிகாரி இணைந்து நடாத்தப்பட்ட சிறுவர் தினம் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் தரம் ஒன்று முதல் பதிமூன்று வரை உள்ள மாணவ, மாணவிகள் 140 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் தரம் ஒன்று மாணவர்களுக்கு எமது இல்லம் தரம் இரண்டு மாணவர்களுக்கு எமது குடும்பம் தரம் மூன்று மாணவர்களுக்கு எமது பாடசாலை தரம் நான்கு ,ஜந்து, தரம் ஆறு எமது கிராம் தரம் ஏழு, எட்டு எமது கடற்கரை தரம் ஒன்பது மேல் பத்து ,பதினொன்ரு ,பணிரெண்டு, பதிமூன்று மாணவர்களுக்கு நுன் உயிர் சம்பந்தப்பட்ட வரைபடங்கள் வரையும் போட்டிகள் இடம் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு திறக்கபட்டு 250/= பணம் வைப்பீடு செய்து வழங்க பட்டது.
பங்கு கொண்ட சகலருக்கும் நற் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்கனவே மக்கள் வங்கியில் வங்கி கணக்கு உள்ளவர்களுக்கு மேலதிகமாக 250/= வைப்பிட்டு சேமிப்பு புத்தகம் வழங்க பட்டது.
நிகழ்வில் ஹட்டன் வலயத்தின் காவல் துறை உயர் பதில் அதிகாரி திரு.பாருக் மற்றும் ஹட்டன் மக்கள் வங்கி கிளை முகாமையாளர் ஏனைய அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.