மஸ்கெலியா சாமிமலை பகுதியில் கெப் வண்டியொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
சாமிமலை மூன்றாவது மைல்கல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி 30 மீற்றர் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், கெப் வண்டியின் சாரதி, அவருக்குப் பின்னால் பயணித்த 12 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்து டிக்ஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.