ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்னே தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் போட்டியில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
தமயந்தி தர்ஷா மற்றும் சுசந்திகா ஜெயசிங்க ஆகியோர் கடந்த 2002ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்காக 2 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தனர்.