வருடாந்த கிறிஸ்மஸ் தின ஒளிவிழாவை முன்னிட்டு விஷ்ணு
ஆரோஹணம் இலவச கல்வி திட்டத்தின் ஊடாக 24.12.2022 ஆம் திகதி விஷ்ணு ஆரோஹணா வட்டவளை தலைமை காரியாலயத்தில் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், அதே போல நுவரெலியா தொகுதி அமைப்பாளருமான கலாநிதி சதானந்தன் திருமுருகன் அவர்களின் தலைமையில் கல்வித்திட்டத்தின் கீழ் கல்வி பயில்கின்ற மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கிறிஸ்மஸ் தின ஒளிவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டதுடன், விழாவில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கான பரிசுப் பொதிகளும் கலாநிதி சதானந்தன் திருமுருகன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பார்கள் மற்றும் அமைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துசிறப்பித்தார்கள்.