எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா துப்பாக்கியால், தன்னை தானே சூட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
வாதுவ பகுதியைச் சேர்ந்த எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா, இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
