தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 6 புதிய பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசத்திற்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்டி மாவட்டத்தின் தும்பனே பகுதிக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கணை மற்றும் வரக்காபொல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல மற்றும் ரிதிகம ஆகிய பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
