எஸ்.கௌசல்யா
தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயாவை நோக்கி செல்லும் பிரதான வீதியில் பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்காவத்தை எனுமிடத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று, தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயாவை நோக்கி கொஸ்காவத்தை பகுதியில் வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுக்கு வழிவிட ஒதுங்கிய போது வீதியில் இடம்பெற்ற போதாததால் கல் ஒன்றின் இடுக்கில் இருகிகொண்ட நிலையில் இவ் வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாற்று வீதிகள் இல்லாத காரணமாக இவ் வீதியின் உடாக தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா பகுதிக்கும்,பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை பகுதிக்கும் பயணிக்கும் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் இடுக்கில் இருகி கொண்ட முச்சக்கர வண்டியை பாதுகாப்பாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேநேரத்தில் பூண்டுலோயா பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது


