விகாரமஹா தேவி பூங்காவை கொழும்பு மாநகர சபைக்கு ஒப்படைக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கினார்.
அபிவிருத்தி நோக்கங்களுக்காக எந்தவொரு சொத்தையும் கையகப்படுத்தும் திறன் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உள்ளது. அது நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் பிரிவு 50 இன் படியாகும்.
திருத்த வேலைகள் நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள சொத்துக்கள் திருத்த வேலைகளின் பின்னர் அந்த குறித்த சொத்துக்கள் எந்தெந்த நிறுவனங்களுக்குச் சொந்தமானதோ அந்தந்த நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், இந்த பூங்காவை நவீன உலகிற்கு ஏற்றவாறு நவீனப்படுத்துவதற்கு உழைத்தார்.
அதன்படி அதுவரை கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டில் இருந்த விகாரமஹாதேவி பூங்கா 2011ஆம் ஆண்டு திருத்த வேலைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டது. இதன்படி, உலக வங்கியின் உதவியுடன் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொழும்பு மெட்ரோ நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2013 ஆம் ஆண்டு விகாரமஹா தேவி பூங்கா புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் உள்ள பிரதான நகரங்களில் அமைக்கப்படுகின்ற நகரப் பூங்காக்களில் உள்ள அடிப்படையான ஒரு விடயம் என்னவென்றால், வேலிகள், மதில்கள், வாயில் கதவுகள் போன்றவற்றால் மூடி வைக்கப்படாத சுதந்திரமான திறந்த சூழல் ஒன்றை மக்களுக்கு உருவாக்குவதாகும்.
அதை முன்மாதிரியாகக் கொண்டு, புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் விஹார மகாதேவி பூங்காவின் பகுதி முழுவதும் இருந்த இரும்பு வேலிகள் அகற்றப்பட்டு எல்லைகள் இல்லாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விகார மகாதேவி பூங்காவை திருத்த வேலைகளின் போது பூங்காவைச் சுற்றியுள்ள இரும்பு வேலி அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக இலுப்பை, பாலை, முதிரை போன்ற புதிய தாவரங்கள் நட்டு, புதிய திட்டத்தின்படி புனரமைக்கப்பட்டது. இங்கு வீதி விளக்குகள் அலங்காரத்திற்காக விஷேடமான தெருவிளக்குகள் அலங்காரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பூங்கா பகுதியைச் சுற்றி, குழந்தைகள் வேடிக்கை அல்லது உடல் ஆரோக்கியத்திற்காக சைக்கிள் ஓட்டும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. புதிய பூங்காவில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய நடை பாதைகளும் உள்ளன.
விகாரமஹாதேவி பூங்கா பிரதேசம் 50 ஏக்கரை அண்மித்துள்ளது.கொழும்பு கருவாத் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள இந்த நூறு ஏக்கர் காணி 1866 ஆம் ஆண்டு அப்போதைய காலனித்துவ செயலாளரிடம் இருந்து கொழும்பு மாநகர சபையினால் சுவீகரிக்கப்பட்டதாகவும், பின்னர் நகரவாசிகளுக்கு ஓய்வு மற்றும் மகிழ்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் இப்பூங்கா கூறப்படுகிறது.
கொழும்பு தர்மபால மாவத்தை, சேர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, ஆல்பர்ட் சந்திரவங்கயா, கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர மாவத்தை முதலியவற்றின் எல்லையில் அமைந்துள்ள இப்பூங்கா அக்காலத்தில் ‘செர்கியுலர் கார்டின்’ என அழைக்கப்பட்டது. இந்தக் காணிகள் மேயர் சர்குலஸிடமிருந்து கொழும்பு மாநகர சபையால் கையகப்படுத்தப்பட்டதால் இந்தப் பெயரால அழைக்கப்பட்டது. சில காலம் கழித்து, 1887 ஆம் ஆண்டில், பிரிட்டனின் விக்டோரியா மகாராணியின் “பொன்விழா” நிகழ்வில் இப் பூங்காவிற்கு விக்டோரியா பூங்கா (Victoriya Park) என்று பெயரிடப்பட்டது.
விகாரமகா தேவி பூங்கா திருத்த வேலைகள் செய்யப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகிறது. இதுவரை வந்துள்ள சிறு புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து விகாரமஹாதேவி பூங்காவை கொழும்பு மாநகர சபைக்கு மாற்றும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
முனீரா அபூபக்கர்
