Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அமைச்சர் பிரசன்னவின் பெயரைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் காணிகளை நிரப்பிய இருவர் கைது…
இலங்கை

அமைச்சர் பிரசன்னவின் பெயரைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் காணிகளை நிரப்பிய இருவர் கைது…

ThanaBy ThanaNovember 7, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பெயரைப் பயன்படுத்தி கலல்கொட பிரதேசத்தில் அனுமதியின்றி காணிகளை நிரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவத்துகொட, கலல்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக காணி சுவீகரிப்பு இடம்பெறுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு நேற்று (06)  தகவல் கிடைத்தது. இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் விசேட அமுலாக்கப் பிரிவிற்கு தலைவர் அறிவித்துள்ளார். இதன்படி குறித்த பிரிவின் அதிரடி சோதனை பிரிவினர் குறித்த பகுதியில் அவசர சோதனையில் ஈடுபட்டனர்.

இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் விசேட அமுலாக்கப் பிரிவினர் அங்கு சட்டவிரோதமாக காணிகளை நிரப்பி வந்த இருவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன் டிப்பர் இயந்திரம் மற்றும் மண் அகழ்வு இயந்திரம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான ஒருவரும் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மற்றும் தொடர்புடைய வாகனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் விசேட அமுலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் திருத்தப்பட்ட சட்டத்தின் பிரகாரம், இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் விசேட அமுலாக்கப் பிரிவினருக்கு எந்தவொரு பிரதேசத்திலும் அனுமதியற்ற மீளமைப்பு அல்லது நிர்மாணங்கள் இடம்பெற்றால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதற்கு அதிகாரம் உள்ளது.

இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு மறுசீரமைப்பும் அங்கீகரிக்கப்படாத மீள்திருத்தமாகும். அதன்படி, தாழ்நிலங்கள் / சதுப்பு நிலங்கள் / சதுப்பு நிலங்கள் அல்லது தரிசு நிலங்கள், கால்வாய்களைக் கடந்து மேற்கொள்ளப்படும் கட்டுமானம் அல்லது மறுசீரமைப்பு மற்றும் கால்வாய் இருப்புகளை மறுசீரமைத்தல் ஆகியவை அங்கீகரிக்கப்படாத சீரமைப்பு வகையைச் சேர்ந்தவை.

இவ்வாறான அனுமதியற்ற காணி நிரப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, கூட்டுத்தாபனத்தின் விசேட அமுலாக்கப் பிரிவு 24 மணி நேரமும் செயல்படுகிறது.

ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் அல்லது மீள் நிரப்பு நடைபெற்றால், அதுபற்றி எவரும் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு 011–2885357 அல்லது 011–2868002 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம்.

முனீரா அபூபக்கர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.