அவிசாவளை கொழும்பு பிரதான வீதியில் மிரிஸ்வத்த பகுதியில்
மகிழுந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்
உந்துருளியில் பயணித்தார் பாரிய காயங்களுடன் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை அவிசாவளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
