இராகலை தோட்டத்தில் பிறவியிலேயே வாய் பேச இயலாத நிலையில், தன் இளம் வயது மகளுடன் எதுவித வசதியும் அற்ற குடில் ஒன்றில் நிர்கதியான நிலையில் வசித்து வந்த கணவரை இழந்த தாய் ஒருவருக்கு வலப்பனை பிரதேச செயலகம், ராகலை தோட்ட நிர்வாகம், இராகலை நகர் வர்த்தக பெருமக்கள், ராகலை உயர் பாடசாலை, வேல்ட் விஷன் நிறுவனம், மற்றும் நலன்விரும்பிகள் ஒன்றிணைந்து சகல வசதிகளும் கொண்ட வீடு ஒன்றை நிர்மாணித்து கையளிக்கும் நிகழ்வு 2023/11/08 இன்று இராகலை தோட்டம் மத்திய பிரிவில் சிறப்பாக இடம்பெற்றது.
புதுமனைக்கு தேவையான தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வருகைதந்திருந்தோரால் குறித்த குடும்பத்திற்கு பரிசளிக்கபட்டமையும் விசேட அம்சமாகும்.
சரணியா








