கையடக்க தொலைபேசி செயலி ஊடாக ஆட்களை பாலுறவு நடவடிக்கைகளுக்கு அழைத்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 07 இளைஞர்கள் உட்பட யுவதி ஒருவரை மொரட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தோடு சிக்கிய நபரொருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுத்த விசாரணையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் ஓரினச்சேர்க்கை வழங்குவதாகக் கூறி அவர்களின் வீடுகளுக்கு அழைத்து வந்து இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் 16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட 07 இளைஞர்களும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நபர்களை குறிவைத்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
