பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று காலை பதிவாகியுள்ளது.
குறித்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்திருந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
புலத்சிங்கள, கோபவக, கோவின்ன பகுதியைச் சேர்ந்த ஹொரண வித்யாரத்ன வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பிரபுத்த பிரபாஸ்வர என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
