உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் மிக மோசமான தோல்விகளுக்கான காரணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியுடன் இன்று (10) காலை நாடு திரும்பிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
இலங்கை அணி போட்டியில் தோல்வியடைந்ததற்கு அணிக்கு வௌியே இருந்த சதித்திட்டமே காரணம் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அனைத்து தகவல்களும் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
