ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிதிகொட்டாலியா பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருப்பதாக
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய ரிதிகொட்டாலியா பகுதியில் வைத்து சந்தேகத்துக்கு இடமான நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்தது 10 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு தொடம்வத்த புஜநகர் மஹியங்கனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்