தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (12ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை பண்டிகை காரணமாக பல தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றைய நாளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என கல்வி அமைச்சுகுறிப்பிட்டுள்ளது.
