நாட்டில் இன்று வடக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று (14) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றர் அளவில் கடும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
