மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம் அட்டன்- பன்மூர் அருள்மிகு ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோயில்
மலை சூழ்ந்த திருவிடத்தில் வந்துறையும் திருமகளே
மகிழ்ச்சி பொங்க வாழும் வழி எமக்கருள வேண்டுமம்மா
முயற்சியுடன் என்றும் நாம் முன்னேறிச் செல்வதற்கு
நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா உன்பாதம் சரணடைந்தோம்
தாயாக இருந்தெம்மைக் காக்கின்ற திருமகளே
தளர்வில்லா மனவலிமை எமக்களிக்க வேண்டுமம்மா
திறமையை வெளிப்படுத்தி முன்னேறிச் செல்வதற்கு
நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா உன்பாதம் சரணடைந்தோம்
ஓம் தேவி கருமாரி என்ற பெயர் கொண்டவளே திருமகளே
ஒற்றுமையுடன் வாழும்வழி எமக்கருள வேண்டுமம்மா
உரிமைகளுடன் நாம் முன்னேறிச் செல்வதற்கு
நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா உன்பாதம் சரணடைந்தோம்
சூலத்தைக் கையிலேந்தி தீமைகளையழிக்கும் திருமகளே
சோர்வின்றி வாழும் வழி எமக்கருள வேண்டுமம்மா
சோதனைகள் கடந்து நாம் முன்னேறிச் செல்வதற்கு
நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா உன்பாதம் சரணடைந்தோம்
தமிழ் ஒலிக்கும் நன்னிலத்தில் வந்தமர்ந்த திருமகளே
உறுதி கொண்ட நல்வாழ்வை எமக்கருள வேண்டுமம்மா
உண்மை வழி வாழ்ந்து நாம் முன்னேறிச் செல்வதற்கு
நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா உன்பாதம் சரணடைந்தோம்
கேட்டவரம் தந்தெம்மை ஆட்கொள்ளும் திருமகளே
தொல்லையில்லா நல்வாழ்வை எமக்கருள வேண்டுமம்மா
துன்பமின்றி துயரமின்றி நாம் முன்னேறிச் செல்வதற்கு
நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா உன்பாதம் சரணடைந்தோம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்துமாமன்றம்.