Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

August 9, 2026

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அசானிக்கு கிடைத்த 02 மில்லியன் ரூபா
இலங்கை

அசானிக்கு கிடைத்த 02 மில்லியன் ரூபா

ThanaBy ThanaNovember 14, 2023Updated:November 14, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவான சரிகமப நிகழ்ச்சியில் பங்கு பற்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் இதயத்திலும் குடி புகுந்த குழந்தைதான் இலங்கையின் கண்டி மாவட்டத்தை சேர்ந்த அசானி.
தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகளான இவருக்கு மலையகம்.lk   மூலம் பகிர்ந்த காணொளி மூலம் அசானிக்கு Z தமிழில் பாடும் வாய்ப்பு கிட்டிய நிலையில் ,முதலில் இரண்டு வாரம் வாய்ப்பை வழங்குவதாக குறிப்பிட்ட நடுவர்கள் இன்று அசானியின் திறமைமூலம் போட்டியில் மிக சிறந்த போட்டியாளர்களோடு போட்டிபோட்டு இந்த உயரத்தை எட்டியுள்ளார்.
காணொளிக்கு –  https://web.facebook.com/watch/?v=29037666006369
இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்த போது ஒப்பந்த கூலிகளாக மலையகத்துக்கு வருகை தந்த தமிழ் மக்கள் இன்றும் 200 வருடங்களாகியும் மாறாத வடுக்களோடு வாழ்ந்து வருகின்றனர். கறை படிந்து அவர்களின் கரங்கள் ஆயிரம் கதைகளை சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில்தான் சாமானியர்களை சாதனையாளராக்கும் மேடையில் அசானி பாடல் பாடினார். இதன் பிறகு இந்த மக்களின் உள்ள குமுறல்கள் உலகெங்கும் கேட்க ஆரம்பித்தது. மேடையில் அசானி பேசும் பொழுது அம்மாவுக்காகவும் என் மக்களுக்காகவும் இங்கு பாட வந்தேன் என்று கூறியபோது பலரும் நெகிழ்ந்து போனார்கள்.
 இதன் விளைவாக அசானி பிறந்த ஊரான நயப்பன தோட்டத்தை கனடாவில் வசிக்கும் மலையகத் தமிழரான சுபாஷ் சுந்தர்ராஜ் தத்தெடுத்து முழு கிராமத்தையும் நவீனமயமாக்க முன்வந்துள்ளார். 15 ஆவது வருடமாக ஜீ தமிழ் நடத்திய குடும்ப விருதுகளின் பங்கு பற்றிய இவர் அந்த மக்களுக்கான மாதிரி வீடுகளையும் அசானியின் மூலமாக கையளித்தார். அது மட்டும் இல்லாமல் அசானியின் எதிர்கால தேவைக்காகவும் படிப்பு செலவுகளுக்காகவும் இலங்கை மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய் அவரின் கணக்குக்கு வைப்பிலிட்டுள்ளார். இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷும் கலந்து கொண்ட அந்த மேடையில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றது.
கலையால் முடியாதது எதுவுமில்லை. கலை நினைத்தால் எதையும் செய்யும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாக இருக்கின்றது. மலையக மக்கள் மீது கரிசனை கொண்ட சுபாஷ் சுந்தர்ராஜ் அவர்களை உலகத் தமிழர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
– ராசையா கவிஷான் –
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026
    Editors Picks

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.