வடமாகாணம் – வவுனியா மாவட்டம் – வவுனியா, வைரவப்புளியங்குளம் – அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோயில்
வன்னிப் பெருநிலத்தில் கோயில் கொண்ட விநாயகரே
வருந்தீமை தடுத்தெம்மை வாழவைப்பாய் பெருநிதியே
துன்பம் துடைத்தெறிந்து நலம் வழங்கும் விநாயகரே
தூயவள வாழ்வருள்வாய் வைரவப் புளியங்குளம் உறை ஆதிவிநாயகரே
வளங்கொண்ட தமிழ் மண்ணில் இருந்தருளும் விநாயகரே
வற்றாத கருணையினைத் தந்தெம்மை வாழவைப்பாய் பெருநிதியே
வலிந்து வரும் தீமைகளைத் துடைத்தெறிந்து நலம் வழங்கும் விநாயகரே
தூயவள வாழ்வருள்வாய் வைரவப் புளியங்குளம் உறை ஆதிவிநாயகரே
துதித்து நிற்கும் பக்தர்களின் துயர் போக்கும் விநாயகரே
துணையிருந்து அருகிருந்து வாழவைப்பாய் பெருநிதியே
வேதனைகள் அகற்றி நலம் வழங்கும் விநாயகரே
தூயவள வாழ்வருள்வாய் வைரவப் புளியங்குளம் உறை ஆதிவிநாயகரே
கேட்ட வரம் தந்து அருள் வழங்கும் விநாயகரே
கேடுகள் அண்டா நிலை தந்தெம்மை வாழவைப்பாய் பெருநிதியே
கவலைகள் களைந்து நலம் வழங்கும் விநாயகரே
தூயவள வாழ்வருள்வாய் வைரவப் புளியங்குளம் உறை ஆதிவிநாயகரே
மருதநிலச் சூழலிலே வந்துறையும் விநாயகரே
மாண்புடனே நாம் வாழ உடனிருந்து வாழவைப்பாய் பெருநிதியே
மனமகிழ்வு தந்து நலம் வழங்கும் விநாயகரே
தூயவள வாழ்வருள்வாய் வைரவப் புளியங்குளம் உறை ஆதிவிநாயகரே
தேரேறிப் பவனி வந்து அருள் பொழியும் விநாயகரே
தேவைகளைத் தந்தெம்மை வாழவைப்பாய் பெருநிதியே
தூயமனம் தந்து நலம் வழங்கும் விநாயகரே
தூயவள வாழ்வருள்வாய் வைரவப் புளியங்குளம் உறை ஆதிவிநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.