மஸ்கெலியா நிருபர்.செதி.பெருமாள்18.12.2023.
நல்லதண்ணி வன ஜீவராசிகள் காரியாலயத்திற்கு உற்ப்பட்ட மஸ்கெலிய மல்லியப்பு மற்றும் டீசைட் தோட்ட தேயிலை மலை பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுவதாக இத் தோட்டங்களில் பணி புரியும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வளர்ப்பு நாய்கள் திடீரென இரவு நேரங்களில் சத்தம் இடுவதாகவும் காலையில் சென்று பார்க்கும் போது நாய்கள் காணாமல் போவதாகவும், மேலும் கடந்த வாரம் இரவு 9 மணியளவில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தனது முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த பகுதியில் உள்ள பிரதான சாலையில் இருந்து சிறுத்தை ஒன்று தேயிலை மலை பகுதியை நோக்கி பாய்ந்து சென்று பதுங்கிதாக குறித்த சாரதி தெரிவிக்கின்றார்.
இது குறித்து இப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில் மஸ்கெலியா பிரதான பாதைக்கு அருகில் உள்ள சின்ன சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை மலைகள் காடுகளாக காணப்படுகின்ற. அந்த மலைப்பகுதியில் சிறுத்தைகள் பதுங்கி இருந்து மல்லிப்பூ, டீசைட் பகுதியில் தேயிலை மலை பகுதிக்கு அருகில் உள்ள மலை ஒன்று மாணாப்புல் காடாக உள்ளதாகவும், அந்த பகுதியில் சிறுத்தைகள் பகல் வேளையில் பதுங்கி இருந்து இரவு வேளையில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளுக்கு நடமாட கூடும் எனவும், அந்த தோட்டங்களை சேர்ந்த மக்கள் பீதியில் உள்ளனர். இது குறித்த சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் அதிகாரிகள் கவனம் செலுத்த முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்