நேற்றைய தினம் பண்டாரவளை பொலிஸார் பண்டாரவளை நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதைப்பொருளுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
(1). 44 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 30வயதுடைய வரக்காரோடை வெலிமடை வீதி பண்டாரவளை
(2)46 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 26 வயதுடைய சவுத்கபில்வெல பண்டாரவளை
3). 44 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சமகி மாவத்தை வெலிமடை வீதி பண்டாரவளை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரும்
4). 4.36 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் அளுத்கம பிதுனுவெவ பண்டாரவளை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரும்
5). மீரீகாஸ் சந்தி பண்டாரவளை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபரிடம் இருந்து 4.39.மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும்
மொத்தமாக ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபர்களை இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
