ஹென்பொல்ட், சென்றெகுலர்ஸ், மிளகுசேனை ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்கள் பிரதானமாக பயன்படுத்தும் முக்கிய நடைபாதையே இது.
மெரயா நகருக்கும் வரும் மக்களும், 350 க்கும் மேற்ப்பட்ட மெரயா பாடசாலை மாணவர்கள் தினமும் இப்பாலத்தை பயன்படுத்துகிறார்கள். தோட்டத்தொழிலாளர்கள் செறிந்து வாழும் இப்பகுதியில் பல முக்கிய அரசியல் பிதிநிதிகள் இருப்பினும் இப்பாலத்தின் பாதுகாப்பு கம்பிகள் உடைந்து இதுவரை ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் பொதுமக்கள் மூலமாக மூங்கில் கொண்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தாலும் அது உறுதியற்றாதாக காணப்படுகிறது. ஆகவே இப்பாலத்தில் பயணிக்கும் யாருக்காவது ஏதாவது விபத்துக்கள் ஏற்படும் முன்பாக இப்பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வரவேண்டும். இப்பாலம் தொடர்பா விடயம் தீர்க்கும் வரை மலையகம். lk அவதானித்துக்கொண்டிருக்கும்.
சரத்