லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனத்தின் அனுசரணையின் ஊடாக நேற்று (2022.01.04) அன்று காலை 9.00 மணியளவில் கண்டி-மஹியாவையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு 50,000 இற்கும் மேல் பெறுமதியான சக்கர நாற்காலிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனத்தின் தலைமை நிர்காக அதிகாரி திருமதி.கீர்த்தனா தர்சன் கலந்துகொண்டு சக்கர நாற்காலிகளை வழங்கிவைத்ததுடன் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றும்போது லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனத்தின் சேவைகள் இலங்கையில் பல்வேறுப்பட்ட பிரதேசங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் எமது இந்த சேவையின் ஊடாக பலரது வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளோம் எனவும் தெரிவித்தார்.