இந்து சமுத்திரத்தில் இன்று காலை அடுத்தடுத்து நான்கு நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவிசரிதவியல் திணைக்களத்தின் தரவு படி, இலங்கைக்கு அருகில் ஆழ் கடலில் 4.8, 5.2, 5.8 மற்றும் 5.0 ஆகிய மெக்னிடியுட் அளவுகளில் நில அதிர்வுகள் பதிவாகி இருக்கின்றன.
மாலைத்தீவு கடற்பரப்பிலேயே இந்த நில அதிர்வுகள் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று புவிசரிதவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
