மலையக ஆசிரியர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் அரசறிவியல் செயலமர்வு நடைபெற்றது.
கொட்டக்கலை தமிழ் தேசிய பாடசாலையின் அதிபர் திரு இரா.சிவலிங்கம் அவர்களின் அனுமதியுடன் MIU ஸ்ரீலங்கா சர்வதேச பல்கலைக்கழகத்தின் இணைப்பாளரும் பசரை தேசிய பாடசாலையில் ஆசிரியருமான J M வின் சன்ட் அவர்களை வளவாளராகக் கொண்டு இந்த செயலமர்வு இன்றைய தினம் நடைபெற்றது.
இதன் போது மலையக ஆசிரியர் முன்னணியின் செயலாளர் திரு சின்னையா ரவீந்திரன் மற்றும் கொட்டக்கலை தமிழ் தேசிய பாடசாலையின் ஆசிரியர் திரு மாணிக்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ்வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கலைப்பிரிவு மாணவர்களுக்கே இந்த இலவச செயலமர்வு நடத்தப்பட்டது. இதில் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.









