மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.31.12.2023.
அவிஸ்சாவளை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த மூன்று பேர் நேற்று 30 திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அவிஸ்சாவளை பகுதியில் இருந்து நேற்று இரவு சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வேலையில் சந்தேகத்தின் பேரில் நல்லதண்ணி பொலிஸ்காரர் சோதனை இட்ட போது போதை தரும் மாத்திரை வைத்து இருந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டு இன்று மதியம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
