“இன்ஸ்டாகிராம் முதல் வாட்ஸ்அப் வரை… தொடரும் பாலியல் கப்பம் கோரும் மோசடி…
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த மோசடி இந்தியாவிலிருந்தே முக்கியமாக இயங்கி வருவதாகவும், உள்நாட்டுத் தொடர்புகளும் இதில் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. (PAUSE – PAUSE)மோசடிக்காரர்கள் தங்களின் இலக்குகளை வீழ்த்துவதற்கு முன்னர், அவர்களின் சகோதர சகோதரிகள் உட்பட உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தங்களது நண்பர்கள் பட்டியலில் முன்கூட்டியே இணைத்துக் கொள்கின்றனர்.
இதன் முதல் கட்டமாக, இன்ஸ்டாகிராம் மூலம் அழகான பெண்ணின் புகைப்படத்தைக் கொண்ட கணக்கிலிருந்து ‘Hi’ என குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்தச் செய்திக்கு பதிலளிப்பவர்களுடன் சில நாட்கள் உரையாடி நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அரைகுறை ஆடை அல்லது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி, மறுமுனையிலும் உள்ள நபரை நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறு அல்லது வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் காட்சிகளை வழங்குமாறு தூண்டுகின்றனர்.
பின்னர் அந்த வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்து, அவற்றை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டி பெரும் தொகையைக் கப்பமாகப் பெறுகின்றனர். (PAUSE)எனவே, அடையாளம் தெரியாத கணக்குகள் அல்லது எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், நண்பர் கோரிக்கைகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
