மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.31.12.2023.
ஹட்டன் மா நகர சபைக்கு உரித்தான பேருந்து தரிப்பிடத்தில் பொது மலசல கூடம் மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் உள்ளது.
இந்த மலசல கூடம் ஹட்டன் நகர சபையால்
குத்தகைக்கு விடப்பட்ட மலசல கூடமாகும்.
ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள
அந்த மலசல கூடத்தை உபயோகிக்கும் மக்களிடம் இருந்து 30 ரூபா கட்டணம் அறவிடபடுகிறது.
பொது மக்கள் பாவிக்க முடியாத அளவிற்கு
இந்த மலசல கூடம் கடந்த சில ஆண்டுகளாக இருக்கிறது.
கழிவு நீர் நடைபாதையில்
வழியாக செல்வதாலும்
சுற்று சூழலில் துர்நாற்றம் வீசுகின்றது.
பேருந்து தரிபிடம் முழுவதும் இந்த துர்நாற்றம்
பரவலாக வீசுகிறது.
இதனால் நோய்கள் உருவாகும் சூழல்
அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த மலசலகூடத்திற்க்கு வருடாந்த குத்தகையாக 13 லட்சம் ரூபாய் ஹட்டன் நகர சபையால் அறவிடபடுகிறதாக தெரிய வருகிறது.
இவ்வாறு பாரிய அளவில் நிதி பெற்ற போதும் முறையாக மலசல கூடம் இல்லை. இதற்கு யார் பொறுப்பு கூறுவது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஹட்டன் நகர சபை செயலாளர் மற்றும் சுற்றுசூழல் அதிகாரி இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.
பொது சுகாதார அதிகாரிகள் இந்த இரு மலசல கூடங்களை பார்த்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் இந்த மலசல கூடங்களை பயன்படுத்துவோருக்கு புதிய வகை வைரஸ்கள், நோய்கள் உருவாக வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஹட்டன் நகருக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி இந்த மலசல கூடங்கள் மீது உடனடியாக கவனம் செலுத்துமாறு பாடசாலை மாணவர்கள் மற்றும் பயனிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


