நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நான்காயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 14,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கிழக்கு மாகாணத்திலே அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் மூவாயிரத்து 811 குடும்பங்களை சேர்ந்த 12,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
